1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (13:52 IST)

மீண்டும் ஒரு ஹாலிவுட் படம்… இளைஞர்களின் ஆதர்ச நாயகியோடு இணைகிறாரா தனுஷ்?

தனுஷ் தற்போது குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இட்லி கடை படத்தை இயக்குவதோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது தவிர ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தி படம் மற்றும் இளையராஜா பயோபிக் என அவரது வரிசை நீளமாக உள்ளது.

இது தவிர சில ஹிட் பட இயக்குனர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ட்ரிட் பைட்டர் என்ற சோனி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தனுஷ் சிட்னி ஸ்வீனியோடு இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் “An extra ordinary journey of fakir’ என்ற பிரெஞ்ச் படத்திலும் மற்றும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.