1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:23 IST)

இளசுகளைக் கவர்ந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்… யுடியூபில் நடத்திய சாதனை!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடல் ரிலீஸானது.

பாடலில் பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தார். பாடல் வரிகள் மொக்கையாக இருந்தாலும் பாடல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் யுடியூபில் இந்த பாடலின் லிரிக் வீடியோ யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. தொடர்ந்து தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறி’ மற்றும் ரௌடி பேபி போன்ற பாடல்கள் யுடியூபில் வைரல் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.