1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 4 மே 2017 (11:59 IST)

தனுஷுக்கு ஜோடியா சுனைனா?

கெளதம் மேனன் இயக்கிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், தனுஷுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்  என்று கூறப்படுகிறது.
 
 
தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்னொரு ஹீரோயினாக சுனைனாவும் நடித்துள்ளார் எனத்  தெரிய வந்துள்ளது. 
 
‘தெறி’ படத்தில் ஒரு காட்சியில் வந்தது போல் இல்லாமல், கூடுதல் காட்சிகளில் வருகிறாராம் சுனைனா. அவர் சம்பந்தப்பட்டக் காட்சிகளை மும்பையில் படமாக்கியிருக்கிறார் கெளதம் மேனன். 
 
சுனைனா முதன்முதலில் ஹீரோயினாக நடித்த ‘பெல்லிக்கு முண்டு பிரேம கதா’ தெலுங்குப் படம், சமீபத்தில் ரிலீஸானது.  இந்தப் படத்தை, தமிழிலும் டப் செய்து முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இதனால், மகிழ்ச்சியில் இருக்கிறார் சுனைனா.