1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (17:04 IST)

தனுஷ் இயக்கும் ஹிந்திப் படம்?

தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் படம் இயக்கப் போகிறார் தனுஷ் என்கிறார்கள்.



 
நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என படிப்படியாக வளர்ந்தவர் தனுஷ். தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் ‘ஷமிதாப்’ மற்றும் ‘ராஞ்ஹெனா’ படத்தில் நடித்துள்ள தனுஷ், தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ தமிழ் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எனவே, ‘பவர் பாண்டி’ இரண்டாம் பாகம் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்து அவர் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறார் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாலிவுட்டில் அவருக்கு அனுபவம் இருப்பதால், அதைக்கொண்டு படம் இயக்கப் போகிறார் என்கிறார்கள். அனேகமாக, அமிதாப் பச்சன் அந்தப் படத்தில் நடிக்கக் கூடும்.