1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (12:00 IST)

தனுஷ் கஜோல் மோதல்; விஐபி 2 வைரலாகும் பாடல் மேக்கிங் வீடியோ

தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோரை வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் விஐபி 2. வேலையில்லா  பட்டதாரி 2. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை ஒரு நிகழ்ச்சி மூலம் வெளியாகி இருந்தது.

 
ஹீரோ தனுஷுடன் சரிக்குசரி போட்டிபோடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை கஜோல். கதைப்படி பிஸ்னஸ் போட்டியாளரான தனுஷ், கஜோல் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறதாம். இது வில்லி வேடமா  என்று பட தரப்பிடம் கேட்டபோது, ‘கஜோல் கதாபாத்திரம் பிடிவாதத்துடன் கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 
தனுஷ் கஜோல் மோதிக்கொள்ளும் விஐபி 2 தூரம் நில்லு மேக்கிங் வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.  விஐபி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மும்பையில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.