திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (23:23 IST)

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தனுஷ் பட நடிகை !

கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில், மஞ்சுவாரியார் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலுடன் மரைக்காயர்  அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்திலும் மம்முட்டியுடன் தி பிரீஸ்டு என்ற படத்திலும், நிவின்பாலுடன் படவெட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.,

இந்நிலையில், 42 வயதான மஞ்சுவாரியர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட்டிங் எடுத்துள்ளார். அதில், இளம்பெண்ணைப்போல் முன்னணிநடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்திலுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.