திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (23:44 IST)

தனுஷ் யாருடைய மகன்? நெருங்கியது தீர்ப்பு தேதி

தனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களது மகன் என்ற உரிமை மட்டும் போதும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



 


இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தேர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தீர்ப்பு தேதி நெருங்கிவிட்டதாகவும் இந்த வழக்கு மிகவிரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக தனுஷூக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை தனுஷ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது