வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (10:38 IST)

தனுஷ், சௌந்தர்யாவும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்: நடிகை கஜோல் பேச்சு

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டிரைலர் நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் வெளியானது. சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஜோல், தமிழில் பேச கஷ்டமாக இருக்கும் என பயந்து, முதலில் படத்தில்  ஒத்துகொள்ள பயந்தேன். ஆனால் சௌந்தர்யா, தனுஷ் இருவரும் படத்தில் அதிக வசனம் இல்லை என்று கூறியதால் சரி என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்லவர்கள் என்று நினைத்தால் என்னை ஏமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பின் முதல் நாள் 2  பக்கத்திற்கு வசனங்கள் கொடுத்தார்கள்.
 
ஆனால் பயந்து போன எனக்கு பயத்தையும் தாண்டி நடிக்க வைத்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், இப்படக்குழுவுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியான நேரமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.