திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:42 IST)

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தனுஷ்-செல்வராகவன் படங்கள்!

selvaragavan
சகோதரர்களான தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் நடித்த பகாசூரன் என்ற திரைப்படம் அதே பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரது படங்கள் தனித்தனியாக ரிலீஸ் ஆவது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி படமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva