செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:39 IST)

தனுஷ் நடிச்ச கேங்ஸ்டர் படங்கள் எல்லாமே ப்ளாப்தானாம்… அப்பயும் விடா முயற்சியோட இருக்காரே!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்.  அவர் நடிப்பில் உருவான பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அவரின் நடிப்பு திறனுக்கு சாட்சியாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த படத்தில் தனுஷ் லண்டன் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்த பெரும்பாலான படங்கள் அட்டர் ப்ளாப்தான் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த புதுப்பேட்டை நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ரிலிஸின் போது வெற்றி பெறவில்லை. அதே போல பரட்டை என்கிற அழகுசுந்தரம், மாரி1, மாரி 2 மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும் இதே நிலைதான். இடையில் வடசென்னை படம் வெற்றி பெற்றாலும், அதில் தனுஷின் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன்தான். இப்படி இருந்தாலும் தனுஷ் அடுத்து மாரி 3 மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களிலும் நடிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியாகி பீதியை கிளப்புகின்றன.