திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 18 மே 2023 (08:26 IST)

மலையாளத்தில் பேய் ஹிட் அடித்த ‘2018’… தமிழ் ரீமேக்கில் நடிக்க தனுஷ் ஆர்வம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து, வெள்ளத்தால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதை மையமாக வைத்து 2018 என்ற படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கினார். இதில் டோவினோ தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

மே 5 ஆம் தேதி ரிலீஸான இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரிலீஸாகி 11 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை புலிமுருகன் மற்றும் லூசிபர் ஆகிய படங்களின் வசூல் சாதனையை தவிர மற்ற படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்து ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வெள்ளம் வந்ததை போல தமிழ்நாட்டிலும் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் வந்தது. அதற்கேற்றார் போல கதையை மாற்றி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.