ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (22:27 IST)

ஊட்டி குளிரில் தன்ஷிகாவை புரட்டி எடுத்த இயக்குனர்

கோடை வெயில் கொளுத்திய நிலையில் ஊட்டியில் படப்பிடிப்பு என்றால் எந்த அளவுக்கு குஷி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை, அதுவும் தன்ஷிகாவுடன் ஷூட்டிங் என்றால் டபுள் சந்தோஷம் என்ற நிலையில் குஷியாக படப்பிடிப்புக்கு கிளம்பினர் 'உரு' படக்குழுவினர்



 


ஆனால் அங்கு போனபின்னர் தான் தெரிந்தது அந்த குளிரில் இயக்குனர் எடுக்கவுள்ளது மழையில் நனையும் காட்சி என்று. சும்மாவே நாலைந்து ஸ்வெட்டர் போட்டால் தான் வெளியில் வரமுடியும் என்ற நிலையில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டி கொண்டிருக்க லாரி நிறைய தண்ணீர் கொண்டு வந்து மழைக்காட்சியை படமெடுத்தாராம் இயக்குனர் விக்கி ஆனந்த்.

அந்த கடுங்குளிரிலும் மழை காட்சியில் முகம் கோணாமல் புரண்டு புரண்டு நடித்து ஒத்துழைப்பு கொடுத்தாராம் தன்ஷிகா. தன்ஷிகா இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்காது என்றும், அதனால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி என்றும் சமீபத்தில் நடந்த 'உரு' பத்திரிகையாளர் சந்திப்பின்போது நன்றி கூறினார் இயக்குனர் விக்கி ஆனந்த்