தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப் போவது எப்போது?
மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்கள் கருத்தாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.