1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (11:18 IST)

மூன்று பாகங்களாக வெளிவருகிறது 'பாகுபலியின் சிவகாமி'

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என்பது தெரிந்ததே. அந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த இயக்குனர் ராஜமெளலி, சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் ஒன்றை மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்.
 
சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், மற்றும் அவர் சிறுவயதிலேயே கலந்து கொண்ட போர் ஆகியவை குறித்து திரைப்படமாக இயக்கவுள்ளார். ஆனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகாது என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக இந்த படங்களை ராஜமெளலி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
சிவகாமி மற்றும் கட்டப்பா கேரக்டர்களில் ஏற்கனவே நடித்த ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்தை ராஜமெளலி மற்றும் தேவகட்டா ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். பாகுபலி ரசிகர்களுக்கு மிக விரைவில் ஒரு செம விருந்து காத்திருக்கின்றது.