இந்தியா பாகிஸ்தான் - அட, விஜய் ஆண்டனி இசையமைக்கலையாம்

Mahalakshmi| Last Modified சனி, 20 டிசம்பர் 2014 (10:33 IST)
விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் இரண்டுக்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். முழுநேர நடிகராகிவிட்டேன் என்று அவர் சமீபத்தில் அறிவித்ததை மெய்ப்பிக்கும்வகையில் புதிய படமான இந்தியா பாகிஸ்தானின் இசைப் பொறுப்பை வேறொருவரிடம் தந்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் 3 -வது படம் இந்தியா பாகிஸ்தான். படத்தின் பெயரை வைத்து எல்லை தகராறு பற்றிய படமாக இருக்குமோ இல்லை கிரிக்கெட் குறித்த கதையா என்றெல்லாம் தவறாக கற்பனை தோன்றும். இந்தியா பாகிஸ்தான் மாதிரி சதா ஈகோவுடன் முறைத்துக் கொண்டிருக்கும் காதலன், காதலி பற்றிய கதைதான் இந்தப் படம்.

மித்ரன் ஜவஹரின் உதவியாளர் ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தீனா தேவராஜ் இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரித்துள்ளார்.
ஹீரோயினாக அறிமுகமாகியிருப்பவர் சுஷ்மா என்ற புதுமுகம்.


இதில் மேலும் படிக்கவும் :