இந்திய படங்கள் ஆஸ்கர் விருதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன் –தீபிகா படுகோன்!
இந்தி சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக அறியபடுபவர் தீபிகா படுகோன். இவர் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பில்லு பார்பர், பத்மாவத் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தமிழில் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோன், கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது கமிட்டியில் இடம்பெற்றார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருதில் நிறைய தகுதியான இந்தியப் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “ RRR படத்துக்கு ஆஸ்கர் அறிவிக்கப்பட்ட போது பார்வையாளர்களில் ஒருவராக நானும் இருந்தேன். அந்த படத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அந்த படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் அறிவிக்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்டேன். அது மிகப்பெரிய தருணம்” எனக் கூறியுள்ளார்.