1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (14:58 IST)

கமல் கட்சியில் சேர ஆசைப்படும் ஷகிலா !

இன்றைக்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் அரசியல் கட்சியில் சேருவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது.



நடிப்பில் கிடைக்கும் புகழை வைத்து அரசியலில் தடம் பதித்து வெற்றி காணலாம் என்ற நம்பிக்கையுடன் பலர்  அரசியலில் இறங்கி வருகிறார்கள்.  நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்தக் கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா,  கவிஞர் சினேகன் உள்பட பல சினிமா பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். இந்நிலையில் நடிகை சகிலாவின் கமல் கட்சியில் சேர ஆசைப்பட்டுள்ளார். இது தொடர்பாக அண்மையில் அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
"நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது" என்றார் ஷகிலா.