முக்காலா முக்காபுல்லா பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறை காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கத்தில் அடிக்கடி தமிழ் பாடல்களுக்கு ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே
ஏற்கனவே தேவர் மகன் படத்தின் பாடலான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ’ஒட்டகத்த கட்டிக்கோ’ பாடல் ஆகியவற்றுக்கு அவர் தனது மனைவி மகளுடன் நடனம் ஆடியதே தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அவர் பிரபுதேவா, நக்மா நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஏஆர் ரகுமானின் ’முக்காலா முக்காபுலா’ என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம், டிக்டாக்கில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட பாகுபலி பட வீடியோவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே