வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (23:11 IST)

தர்பார் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள்: இன்ப அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ’தர்பார்’ படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்து விட்டனர் 
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்ளரங்கில் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே ’தர்பார்’ படத்தின் இரண்டு பாடல்களை சிங்கிள் பாடலாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாடல் நவம்பர் 24ஆம் தேதியும் இரண்டாம் பாடல் டிசம்பர் 1ஆம் தேதியும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இருக்கும் என்றும் அதிசயமாக இந்த படத்தை ஒருசில புரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது