இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணம்… தேதி & இடம் பற்றி வெளியான தகவல்!
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எளிமையாக நடத்தப்பட்டது. அதையடுத்து மே 1 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட ஷங்கர் குடும்பம் திட்டமிட்டது. அதையடுத்து திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார் ஷங்கர்.
ஆனால் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இடையில் ஐஸ்வர்யா- தாமோதரன் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சட்டபூர்வமாக விவகாரத்தைப் பெற்றனர்.
இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இவருக்கு வெளிநாடுகளில் பிஸ்னஸ் நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.