திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (10:49 IST)

எனக்கு பிடித்த இசையமைப்பாளர் யுவன்.. வலிமை அப்டேட் வரும்! – இமான் பதில்!

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற இமான் தனது விருப்பமான இசையமைப்பாளர்கள் குறித்து பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருந்து இமானுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர் “எனக்கு மிகப்பிடித்த இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. வயதே வா வா சொல்கிறது., தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாய் பாடல்கள் பிடித்தவை. இளையராஜா தனி நூலகம். அவரை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அப்பறம் வித்யாசாகர், பரத்வாஜ் உள்ளிட்டோரும் எனக்கு பிடிக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்டு போர்டு பிடித்த ரசிகர்களை கடிந்து கொண்ட அவர் வலிமை அப்டேட் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.