"உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ் பாக்கலாம் போ" கமல் ஹாசனை கலாய்த்த தயாரிப்பாளர்!

Last Updated: வெள்ளி, 24 மே 2019 (19:02 IST)
இயக்குனரும், தயாரிப்பாளருமான சிவி குமார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை மோசமாக கலாய்த்து ட்விட் செய்துள்ளார். 
17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  ஆனால், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 
 
தமிழ அரசியலின் புது வரவான கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பல தொகுதிகளில் 3 ஆவது இடத்தைப் தக்கவைத்துள்ளது. அரசியலில் என்ட்ரி கொடுத்த ஓராண்டிலேயே ஓரளவிற்கு பேசக்கூடிய ஒன்றாக உள்ளது.  பாஜக தமிழகத்தில்  தோல்வியடைந்ததற்கு கமல் ஹாசன் முக்கிய காரணமாக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் இயக்குனரும், தயாரிப்பாளருமான சிவி குமார் நடிகர் கமல் ஹாசனை கிண்டலடித்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதாவது, போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ...!

 
அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே ... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா....!


இதில் மேலும் படிக்கவும் :