செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (15:44 IST)

நட்சத்திர கிரிக்கெட் வீரராக நடிக்கும் அசோக் செல்வன்? மீண்டும் ட்ரெண்டாகும் ட்விட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளைப் கைப்பற்றியவராக அறியப்படுகிறார்.
 
அத்துடன் அதிக முறை இக்கட்டாண தருணங்களை பேட்ஸ் மேனாகவும் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
 
அண்மையில் ரசிகர்கள் இணையதளத்தில் அஸ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் எனக் கேள்விகள் கேட்டு உரையாடி வந்தனர். அதற்கு பல தரப்பினர் க்ரீன் சிக்னல் கொடுத்தனர். 
 
இதுகுறித்து, நடிகர் அசோக் செல்வன் கூறும்போது, “இதற்கு நான் பொறுப்பில்லை என கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு டேக் செய்திருந்தார்.  அப்போது அதறகு ரிப்ளை செய்துள்ள அஷ்வின், “இணைந்து பணியாற்றுவதற்கு முன்பாக கதையில் இருக்கும் சிஎஸ்கேவின் பகுதியை முதலில் முடித்து விடுவோம்.

எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அதற்கடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு செய்வோம்” என தெரிவித்து இருக்கிறார். ஆக வதந்தி தற்போது உண்மையில் உருவெடுக்க போகிறது கூடிய விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என நம்பலாம்.