1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (20:55 IST)

நடிகர் சங்க தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஜுலை 15 -ஆம் தேதி நடப்பதாக இருந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
 
ஜுலை 15 நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவிருப்பதாக இப்போது தலைவராக இருக்கும் சரத்குமார் தலைமையிலான நிர்வாகிகள் அறிவித்தனர். ஜுலை 15 புதன்கிழமை என்பதால் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினத்தில் தேர்தலை நடத்த வேண்டும், வழக்கறிஞர்கள் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்பதை மாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும். வாக்காளர் விவரங்கள் அடங்கிய பட்டியலை தரவேண்டும் என்று நாசர், விஷால் தரப்பினர் மனு செய்தனர். 
 
இந்த தேர்தலையே தடை செய்ய வேண்டும் என்று நடிகர் பூச்சி முருகன் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
 
விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி பொதுச்செயலாளர் ராதாரவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  3 ஆயிரம் பேர் கூடி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்த தேர்தலை யாரோ சிலருக்காக மாற்ற முடியாது என்று பதில் மனு தாக்கல் செய்தார் ராதாரவி.
 
விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று அந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். ஜுலை 15 நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடைவிதிப்பதாகவும், வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பாக நடிகர் சங்கம் இரண்டு வாரகாலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.