1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (09:08 IST)

நவம்பரில் ‘குக் வித் கோமாளில் 3’: ரசிகர்கள் மகிழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பதும் குறிப்பாக சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குக்’கள் மற்றும் கோமாளிகள் சிலர் தற்போது திரையுலகில் பிஸியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குக் வித் கோமாளி 3 விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை விஜய் டிவி தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முறை வித்தியாசமான முறையில் குக்’கள் மற்றும் கோமாளிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் சீசன் 2 மிகப் பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து சீசன் 3ஐ அதைவிட ஹிட்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குக்’கள் மற்றும் கோமாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. 
 
வரும் நவம்பரில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்க உள்ளதாகவும் இந்த சீசனிலும் பாலா, சரத், ஷிவாங்கி, உள்பட ஒருசிலர் கோமாளிகளாக தொடர்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன