திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:26 IST)

இயக்குனர் ஷங்கர் பெயரை சொல்லி ஏமாற்றிய மர்மநபர்… ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆதங்கம்!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் இப்போது வரிசையாக திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதையடுத்து அவர் அருண் விஜய்  நடிப்பில் ஹரி இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது தளபதி 65 படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவருக்கு மேலும் பல படங்களின் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் பெயரில் தன்னை ஒருவர் மோசடி செய்தது குறித்து உணர்ச்சி பூர்வமாகப் பேசியுள்ளார்.

அதில் ‘ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து பேசியதாகக் கூறி கிண்டிக்கு வர சொன்னார். நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மட்டும்தான் நாங்கள் கோமாளி… நிஜத்திலும் அல்ல’ எனக் கூறியுள்ளார்.