திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (11:19 IST)

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மீது நடிகை புகார்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபல இசையமைப்பாளராக பணியாற்றி வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராக iருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் இவர் இசையமைத்த வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை, வீரம் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி படங்களுக்கு இசையமைத்து வந்தார். இப்போது புஷ்பா படத்தின் மூலம் மீண்டும் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

சமீபத்தில் இவர் பேன் இந்தியா ராப் ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்தார்.  ஓ பாரி என்ற இந்த பாடல் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ‘ என்ற வரிகள் இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக ஆபாசமாக காட்சிப் படுத்த பட்டுள்ளதாக  தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை கராத்தே கல்யாணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்புக் கேடக் வேண்டும் என அவர் கூறியுள்ளார்.