செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 23 நவம்பர் 2019 (16:18 IST)

யோகி பாபுவுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா...குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தனர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்களில் யோகி பாபு லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  


 
அதுமட்டுமில்லாமல் தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த ஆண்டு மட்டும் 19 படங்கள் கைவசம் உள்ளது. அதே போல ஒரு நாளைக்கு நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக கலக்கி வரும் யோகி பாபு தற்போது ஹெலோ ஆப்பில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த புகைப்படத்தில் அவளும் நானும் என குறிப்பிட்டு "திறமைக்கு தான் எல்லாமே. இல்லாட்டி எனக்கு இப்படி ஒரு அழகான மனைவி கிடைச்சு இருக்குமா. அதனால திறமையை மட்டும் வளருங்க மற்றதெல்லாம் உங்களை எல்லாம் தானே தேடிவரும். இது என்னுடைய அட்வைஸ். கேட்டா கேளுங்க, நல்லா இல்லாட்டி விட்ருங்க என்று பதிவிட்டுள்ளார். யோகி பாபுவின் இந்த போஸ்டை கண்டதும் இவர் தான் உங்கள் வருங்கால மனைவியா என கேட்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை யோகி இதற்கு எந்த ஒரு பதிலையும் கூறாமல் மௌனம் காத்து  வருகிறார்.