திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (13:18 IST)

கெளதம் கார்த்திக் ஹீரோயினுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பி லவ் டார்ச்சர் கொடுத்த கல்லூரி மாணவன்!

கெளதம் கார்த்திக் ஹீரோயினுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பி லவ் டார்ச்சர் கொடுத்த கல்லூரி மாணவன்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் சோனாரிகா படோரியா என்ற நடிகைக்கு கல்லூரி மாணவன் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்தும், ஆபாச மெசேஜ்களும் அனுப்பி வந்துள்ளான்.


 
 
மும்பையை சேர்ந்த சோனாரிகா படோரியா ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தவர். அவர் ஹிந்தி சீரியல் ஒன்றில் பார்வதி தேவி என்ற கதாப்பாத்திரம் மூலம் புகழ் பெற்றவர். தற்போது இவர் இந்திரஜித் படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார்.
 
சோனாரிகா படோரியாவின் செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் சோனாரிகாவை அந்த நபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. நடிகைகளுக்கு இது போன்ற மெசேஜ்கள் வருவது சகஜம் தான் சோனாரிகா அதனை கண்டுகொள்ளவில்லை.
 
ஆனால் பின்னர் அந்த நம்பரில் இருந்து நடிகைக்கு ஆபாச மெசேஜ்கள் வர ஆரம்பித்தன. இதனால் அந்த குறிப்பிட்ட நம்பரை அவர் பிளாக் செய்து வைத்தார். ஆனால் அந்த நபர் விடாமல் வேறு வேறு நம்பர்களில் இருந்து சோனாரிகாவுக்கு மெசேஜ்கள் அனுப்பு தொந்தரவு செய்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சோனாரிகா வேறுவழியில்லாமல் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை சோனாரிகாவுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.