கோப்ரா பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றிய இயக்குனர்… சிக்கலில் தயாரிப்பாளர்!
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றிவிட்டாராம் இயக்குனர் அஜய் ஞானமுத்து
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் விக்ரம்மின் முந்தைய படமான கோப்ராவுக்கு முன்னதாகவே வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இப்போது வரை 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.