திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (17:16 IST)

சினிமா பிரபலம் தற்கொலை….ரசிகர்கள்… திரையுலகினர் இரங்கல்

கேரள மாநிலம் ஆலப்புழா அருகேயுள்ள சேர்த்தலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரூபி பாபு(35).

இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இவரும்  வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த சுனிலும் சில வருடங்களாக லிவிங் டுகெதராக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

திடீரென்று நேற்று ரூபி வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார்.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுனில் தனது நண்பர்களுக்குத் தொடர்பு கொண்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நண்பர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

அங்கு விரைந்த வந்த போலீஸார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட  இருவரது உடலையும் மீட்டும் உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.