படத்துக்காக உண்மையிலேயே அணுகுண்டு வெடிக்கும் காட்சி… நோலன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படமான ஓபன்ஹெய்மர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் இன்செப்ஷன், டன்கிர்க், டார்க் நைட் உள்ளிட்ட பிரபலமான பல படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். கடந்த ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களை குழப்பும் வகையில் பல அம்சங்களை இணைக்கும் உத்தியை கையாள்பவர் கிறிஸ்டபர் நோலன்.
தற்போது கிறிஸ்டோபர் நோலன் அணுகுண்டு பரிசோதனையை மையப்படுத்திய ஓபன்ஹெய்மர் ப்ராஜெக்டை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓபன்ஹெய்மர் என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டோனி ஆகிய பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்துக்காக உண்மையிலேயே அணுகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்க உள்ளதாக நோலன் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கக மாதிரி அணுகுண்டு வெடிப்பையும் நடத்த உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அந்த காட்சியை படமாக்க ஐமேக்ஸ் பிலிம் கேமராக்களை பயன்படுத்த உள்ளார்களாம். இன்னும் சினிமாவில் பிலிம் கேமராக்களைப் பயன்படுத்தும் வெகு சில இயக்குநர்களில் நோலனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.