வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (08:03 IST)

ஆஸ்கர் விழாவில் விருதுகளை அள்ளும் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்!

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகி இருந்தது இந்த திரைப்படம். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கோல்டன் க்ளோப் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட பல விருது விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை அள்ளியது. இந்நிலையில் இன்று நடந்து வரும் ஆஸ்கர் விருதுகள் விழாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை ஓப்பன்ஹெய்மர் சிறந்த இயக்குனர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சில்லியன் மர்ஃபி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டௌனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவு ( ஹோய்டே வான் ஹோய்டோமா) ஆகிய பிரிவுகளில் இதுவரை விருதை வென்றுள்ளது.

சிறந்த திரைக்கத பிரிவுக்கான விருதை அனாடமி ஆஃப் எ ஃபால் என்ற திரைப்படம் வென்றுள்ளது.