1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:34 IST)

தேர்தலால் தள்ளிவைக்கப்பட்ட சீயான் 62 ஷூட்டிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க எஸ் ஜே சூர்யா பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 14 ஆம் தேதி மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேர்தல் காரணமாக பணம் கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.