1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 மே 2022 (10:03 IST)

ரசிகர்களைக் கவர முடியாமல் காத்து வாங்கும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா… !

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு சில ஊடகங்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கொடுத்து வந்த போதிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கூட முதல் நாளுக்குப் பிறகு ரசிகர்கள் கூட்டம் பெரியளவில் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் பெருவாரியான திரையரங்குகளில் சுத்தமாக கூட்டம் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று திரும்பவும் சினிமாவுக்கு வந்த பிறகு ரசிகர்களை முழுமையாகக் கவர்ந்த ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.