திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (12:32 IST)

மீடூவால் டேமேஜ் ஆன பெயர்; வைரமுத்து செய்த வேலை; கிண்டலடிக்கும் சின்மயி

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்திருந்த நிலையில் சின்மயி அதனை கிண்டலடித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசால் ஆதரவளிக்கப்படுவதாக சொல்லப்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் எல்லையில் விமானப்படையின் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டது.

அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும் இந்திய அரசிற்கும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

கவிஞர் வைரமுத்துவும் தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ’'போர்மீது விருப்பமில்லை.ஆனால், தீவிரவாதத்தின் மீதுதீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த சின்மயி தனது டுவிட்டரில் மீடுவிற்கு முன்னர் வைரமுத்து கஜா புயல், சென்னை வெள்ளம் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. முந்தைய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றியும் ஒன்னும் சொல்லவில்லை.

ஆனால் தற்பொழுது மீடுவால் தனது பெயர் டேமேஜானதற்கு பின்னர், தனது பெயரை மீட்டெடுக்க இவர் இப்படி செய்கிறார் என  கூறியுள்ளார்.