வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (19:02 IST)

சின்மயி புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த முன்னாள் காவல்துறை அதிகாரி

பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்புக்கு பின் சின்மயி சில நாட்கள் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அந்த பகுதியில் ஒரு ஸ்பீட் பிரேக் வேண்டும் என்றும் சின்மயி தனது டுவிட்டரில் பதிவு செய்து அதனை அந்த பகுதி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான நட்ராஜ் அவர்களுக்கு டேக் செய்தார்.
 
இந்த தகவல் பதிவு செய்யப்பட்ட ஒருசில மணி நேரங்களில் சின்மயி குறிப்பிட்ட அந்த பகுதியில் உடனடியாக ஸ்பீட்பிரேக் போடப்பட்டது. மயிலாப்பூர் எம்.எல்.ஏ ந்டராஜ் அவர்களின் உடனடியான நடவடிக்கையை பார்த்து அசந்துபோன சின்மயி அவருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
 
மயிலாப்பூர் எம்.எல்.ஏ போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் பொதுமக்களின் புகார்களுக்கு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாறிவிடும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.