முதல்வர் ஜெயலலிதா நலம் பெற யாகம் நடத்தும் நடிகர் சங்கம்
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற யாகம் நடத்தும் நடிகர் சங்கம்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல்வர் குணமடைய வேண்டி வரும் 21ஆம் தேதி அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள வர்த்தக சபை கட்டிடத்தில் யாகம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் திரைப்படத்துறை சார்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், தாணு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நலம் விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மிருத்யுஞ்ஜய மூல மந்திர ஜெபம், மற்றும் மஹா மிருத்யுஞ்சய யாகம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும், இதில் 30 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதுகிறார்கள். இதில் திரையுலகினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் யாகத்துக்கு வருபவர்கள் கைப்பேசிகளையும், அநாகரீக உடைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் திரைப்பட வர்த்தக சபை கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.