புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (08:18 IST)

வாங்கிய விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – ஏன் தெரியுமா ?

பிக்பாஸ் 3 மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமான இயக்குனர் சேரன் தான் நடித்திருந்த படம் ஒன்றை விமர்சனம் செய்யாததால் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்களை எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அப்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு வரவே அதை ஏற்று உள்ளே சென்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அதன் பின் வெளியே வந்ததும் அவர் நடிப்பில் உருவான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பற்றி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்ற காரணத்துக்காக பிஹைண்ட்வுட்ஸ் தளம் தனக்குக் கொடுத்த ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதைத் திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார்.