1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:20 IST)

ராஜாவுக்கு செக் வைக்க களமிறங்கிய சேரன்!

இயக்குனர் சேரன் மூன்று பேர் மூன்று காதல் படத்தை அடுத்து ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஹிரோவாக நடிக்கிறார்.
 
இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக தன்மை கொண்ட சேரன் கடந்த 1997ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமானார். இவரது வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
 
அதன் பின்னர் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் போன்ற படங்களில் ஹிரோவாக நடித்தார். பின்னர் திருட்டு விசிடிக்களை ஓழிக்கும் முயற்சியில் சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், அவர் புதுமுக இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.