புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (00:18 IST)

குரல் கொடுங்கள்: ரஜினி, ரஹ்மானுக்கு சேரன் வேண்டுகோள்

தமிழ் சினிமா இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் உள்ளது. ஜிஎஸ்டி 28%, மாநில அரசின் வரி 30% என்பது உலகில் எங்குமே இல்லாத புதுமையாக உள்ளது. தமிழ் சினிமாவை ஒரேயடியாக அழிக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இன்னும் பெரிய அளவில் குரல் எழும்பவில்லை என்பதுதான் மிகபெரிய ஆச்சரியமாக உள்ளது



 
 
குறிப்பாக திரைத்துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களும் டெக்னீஷியன்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுடைய குரல்களுக்கு தனி மதிப்பு உள்ளது என்றும் சேரன் வலியுறுத்தியுள்ளார். ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களுக்கு சேரன் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “தமிழ்த் திரைப்படங்களுக்கான 30% கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டியை குறைக்க தயவு செய்து குரல் கொடுங்கள். உங்கள் குரல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது எனது வேண்டுகோள்” என தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “ரஜினி சார்… ஜிஎஸ்டி, 30% கேளிக்கை வரியைக் குறைக்க தயவுசெய்து குரல் கொடுங்கள். நமது துறையைக் காக்க வேண்டிய நேரமிது. உங்கள் குரலுக்கென தனி மதிப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.