ஒரு சீனில் கூட நடிக்காமல் ரூ.4 கோடி சம்பளம் வாங்கிய சார்மி
சிம்பு அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகியாக அறிமுகமாகி அதன்பின்னர் தெலுங்கு திரையுலகில் திறமை காட்டிய நடிகை சார்மி, தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார்.
மேலும் ஒருசில லட்சம் சம்பளத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வந்த இவருக்கு தற்போது திடீரென ரூ.4 கோடி சம்பளம் ஒரு படத்திற்காக கிடைத்துள்ளது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு சீனில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத்துடன் நல்ல உறவில் இருக்கும் சார்மி, அவர் இயக்கி வரும் 'பைசா வசூல்' என்ற படத்தில் நடிக்க ஒரு வேடம் கேட்டார். ஆனால் இயக்குனரோ நடிப்பதற்கு பதில் அவருக்கு படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை கொடுத்தார். நடிகர், நடிகைகள் ஒருங்கிணைப்பு, படப்பிடிப்பு பணிகளை கவனிப்பது போன்ற பணிகளை சரியாக கவனித்த சார்மிக்கு ரூ.4 கோடி சம்பளத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிக்கொடுத்துள்ளார் பூரி
சார்மி பத்து படங்கள் நடித்தால் கூட வராத சம்பளத்தை ஒரே படத்தில் அதுவும் நடிக்காமலே சார்மி பெற்றதை நினைத்து டோலிவுட் நடிகைகளின் வயிறு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?