திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:18 IST)

சூப்பர் ஸ்டாரை பற்றி விசாரித்த விஜய்...ராகவா லாரன்ஸ்

vijay-ragawa Lawrence
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 என்ற படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையில் அமைந்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் , நடிகர் ராகவா லாரன்ஸிடம்  'சூப்பர் ஸ்டார் பட்டம்' பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அவர், ''விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை எதுவுமில்லை... அவராவே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார்.   நாம் தான் நமக்குப் போட்டி என்று மேடையில் கூறிவிட்டு அவர் எப்படி மற்றவர்களைப் பற்றி நினைப்பார்? விஜயை நான் எப்போது நேரில் சந்தித்து பேசும்போதும் தலைவர் எப்படி இருக்காரு… நல்லா இருக்கிறாரா என்றுதான் கேட்பார்''…: என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி கூறிய கழுகு, காக்கை கதையில், அவர் விஜய்யை பற்றி கூறியதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.