வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (17:39 IST)

செல்வராகவனின் ‘பகாசூரன்’ லிரிக் பாடல் வீடியோ ரிலீஸ்!

bakasuran
செல்வராகவன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான ‘பகாசூரன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
மறைந்த இசை மேதை பாபநாசம் சிவன் பாடல் வரிகளில் உருவான இந்த பாடலுக்கு  சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். சிவ சிவாய மென்ற டைட்டில் கொண்ட இந்த பாடலை இசையமைப்பாலர்  சாம் சிஎஸ் பாடியுள்ளார். 
 
இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, கூல் சுரேஷ், மன்சூர் அலிகான்  உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது