1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (23:22 IST)

நடிகை பாலியல் புகாரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரபல நடிகர் !

vijaybabu
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து போலீஸார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள   நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க பலரும் கூறி வருகின்றனர்.

எனவே கேரள போலீஸார்   நேரில் வந்து ஆஜராகுமாறு விஜய் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில்,  வெளி நாட்டில் இருந்தபடி விஜய்பாபு முன் ஜாமீன் கீட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம், அவரை கேரளா திரும்பி, விசாரணை அதிகாரிகளின் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில்,  39 நாட்களுக்குப் பிறகு விஜய்பாபு இன்று நாடு திரும்பிய   நிலையில், ஜூன் 2 ஆம் தேதி  அவர் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார்.

இந்த நிலையில் இந்த வழக்கை இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் பாபுவை கைது செய்ய தடை இல்லை என உத்தரவிட்டது. மேலும்,  விஜய்பாபு ஜாமீனில் வெளியே வர ரூ.5 லட்சம் பிணைத்தொகை ஆகவும் இரண்டு நபர்களின் உறுதிமொழியையும் பெற்றுக்கொண்டு அவரை ஜாமீனில் விடவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, விஜய் பாபு கைது செய்யப்பட்டு பின், விடுவிக்கபப்ட்டார். இந்த வழக்கு குறித்து வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் விஜய் பாபுவிடம் விசாரிக்க  நீதிமன்றத்திடம் போலீஸார் அனுமதி பெற்றுள்ளனர்.