1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (09:21 IST)

உடைந்ததா ஞானவேல் ராஜா- சி வி குமார் கூட்டணி?… பின்னனி என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் ஞானவேல் ராஜாவும், சி வி குமாரும் இணைந்து 5 படங்களைத் தயாரிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து முன்னணித் தயாரிப்பாளராக மாறியவர் சி வி குமார். இவர் தயாரித்த சில படங்களை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா வெளியிட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து 5 படங்களை தயாரிக்க உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்த 5 படங்களுக்காக பைனான்ஸை ஞானவேல் ராஜா வழங்க, சி வி குமார் தயாரிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த 5 படங்களும் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுதான் என சொல்லப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஏமாற்றம் இந்த 5 படங்களை இயக்க ஒப்பந்தமான இயக்குனர்களுக்குதான்.