தமிழ் படம் 2; ஓவியாதான் நடிக்க வேண்டும் : இயக்குனருக்கு வந்த கோரிக்கை
இயக்குனர் சி.எஸ். அமுதன் அடுத்த இயக்கவுள்ள தமிழ் படம் 2ம் பாகத்தில், நடிகை ஓவியாவை நடிக்க வைக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கை வந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் ‘தமிழ் படம்’. இதில் நடிகர் சிவா ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
அதன் பின் அமுதன் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மீண்டும் சிவாவை வைத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் அமுதன்.
இந்நிலையில், இந்த படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க வேண்டும் என பலருடம் டிவிட்டரில் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “தமிழ் படம் 2ம் பாகத்தில் ஓவியா நடிக்க வைக்க வேண்டும் என பலரும் என்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி ஓவியவிற்கு தெரியப்படுத்துவேன். அவருக்கு விருப்பம் இருக்கிறா எனப் பார்ப்போம்” என டிவிட் செய்துள்ளார்.