வலிமை அப்டேட்டுக்காக சென்னை வரும் போனி கபூர்!

Last Modified வியாழன், 25 பிப்ரவரி 2021 (07:53 IST)

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் எனக் கேட்டு தர்மசங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கினர். அதையடுத்து அஜித் தலையிட்டு அவர்களை அடக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இப்போது வலிமை சம்மந்தமான அப்டேட் குறித்து ஆலோசிப்பதற்காக தயாரிப்பாளர் போனி கபூர் மும்பையில் இருந்து சென்னை வந்து அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத்தை சந்திக்க உள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :