செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:41 IST)

ஜெயம் ரவி படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜெயம் ரவி  நடிப்பில் சமீபத்தில் 'கோமாளி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூல் மழை குவித்த நிலையில் தற்போது அவர் 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் ''ஜன கன மன' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி நடித்து வருவதாகவும் ஜெயம் ரவி ராணுவ வீரராகவும், சர்வதேச ஏஜண்ட் வேடத்தில் டாப்சியும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜூ, ஆக்சன் கிங் அர்ஜூன், மற்றும் ஈரான் நாட்டின் நடிகை எல்னாஸ் நோரோஸி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருடம் முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது