ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (10:48 IST)

மீண்டும் அம்மா ஆனார் நடிகை ரேஷ்மி மேனன் - குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் முக்கியமானவர்களான அஜித் - ஷாலினி,  சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன். 
இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ‘உறுமி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலித்தனர்.  பின்னர் 2016 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.
மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ரேஷ்மிக்கு சமீபத்தில் சீமந்தம் நடைபெற்று அந்த  புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் வெளியாக அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி ரேஷ்மிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது